சூரியின் 'மாமன்' பட டிரைலர் வெளியானது
சூரி கதை யின் நாயகனாக நடித் துள்ள படம் ,பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் “மாமன்.” அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்க, ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட் டோர் நடித்துள்ளனர். மே 16ல் படம் வெளியாகும் நிலையில் டிரைலர் வெளியாகி உள்ளது. 3 நிமிடம் ஓடும் டிரைலரில் குடும்ப உறவுகளுக்குஇடையே நடக்கும் மோதல்கள், பாசப் போராட்டம்ஆகியவற்றுடன் அக்கா மகன், தாய் மாமன் பந்தத்தை முதன்மையாக கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர்.
'மாமன்' படம் மே 16ல் ரிலீஸாகிறது. 'மாமன்' பட கதையை சூரி எழுதி யுள்ளார். இவர் கூறுகையில் "கதையை நான் எழுதியிருந்தாலும் எனது பெயர் வர வேண்டாம் என இயக்குந ரிடம் சொன்னேன். ஆனாலும் பெயரை போட்டு விட்டார். நான் இங்கு நிற்க என் குடும்பம் தான் காரணம். என் குடும்பம் தான் எனக்கு சாமி. இந்த கதை அங்கிருந்து தான் உருவானது. சின்ன பையனுக்கும், அவனது தாய் மாமனுக்கும் இடையேயான உறவே கதை. படத்தில் சின்ன பையனாக நடித்தவர் இயக்குனரின் மகன் என்றார்.
0
Leave a Reply